ஐபிஎல் கிரிக்கெட்- 2024 எங்கே எப்போது நடைபெறும்? : அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு..

By 
ipl2024c

ஒவ்வொரு ஆண்டும் பிசிசிஐயின் மூலமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் சீசன் தொடங்கப்பட்டது. இதுவரையில் 16 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை டிராபியை கைப்பற்றியுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2 முறை டிராபியை கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் கடந்த ஆண்டு துபாயில் நடந்தது. இதில், ஒவ்வொரு அணியும் புதிய புதிய வீரர்களை தங்களது அணியில் எடுத்துள்ளனர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார் ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார். இதே போன்று பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ஏலம் எடுக்கப்பட்டார்.

இந்த ஆண்டுக்கான ஏலம் வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால், இதுவரையில் தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை. 

இந்த நிலையில் தான் ஐபிஎல் சேர்மன் அருண் சிங் துமால் இந்தியாவில் தான் முழு போட்டிகளும் நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தேதிகளுக்காக காத்திருக்கிறோம்.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டவுடன் ஐபிஎல் தொடருக்கான தேதிகள் முடிவு செய்யப்படும். மேலும், இந்தியாவில் தான் ஐபிஎல் தொடரை நடத்த முயற்சி செய்து வருகிறோம். மார் மாத இறுதியில் ஐபிஎல் தொடங்கும். தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்படும். அரசின் உதவியுடன் அதை செய்வோம் என்று கூறியுள்ளார். இந்த தொடரில் மொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story