யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன? : ஷர்துல் தாகூரை பாராட்டிய அஸ்வின்

Who are you, where is Da Pudichanka  Aswin praises Shardul Tagore

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், இந்தியா 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

இதைத் தொடர்ந்து, ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியின் பீட்டர்சன் அதிக பட்சமாக 62 ரன்களும், பவுமா 51 ரன்களும் எடுத்தனர். ‌

ஷர்துல் தாகூர் :

இந்திய அணியில், ஷர்துல் தாகூர் 17.5 ஓவர்கள் வீசி, 61 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

தென் ஆப்ரிக்கா வீரர்கள் எல்கர், பீட்டர்சன், டாசன், பவுமா, வெர்ரின், மார்கோ ஜேன்சன், லுங்கி நிகிடி ஆகியோர் ஷர்துல் தாகூரிடம் சரணடைந்தனர்.

பாராட்டு :

ஷர்துல் தாகூர், கைல் வெர்ரினின் விக்கெட்டை வீழ்த்தியபோது, களத்தில் இருந்த மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், தாகூரை பார்த்து,

‘யார்ரா நீ, எங்கேந்து டா புடிச்சாங்க உன்ன? நீ பால் போட்டாலே விக்கெட் விழும்’ என தமிழில் கிண்டலாக பாராட்டினார். அவர் பேசிய வார்த்தைகள் நடுவர் மைக்கின் மூலம் ஒளிபரப்பில் கேட்டது. 

இதையடுத்து, அந்த வீடியோவை பலரும் டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story