இன்றைய கபடியில் கலக்கப் போறது யாரு.? தமிழ் தலைவாஸா? தெலுங்கு டைட்டன்ஸா?

Who is going to mix in today's kabaddi. tamil thalaivas Telugu Titans

புரோ கபடி ‘லீக்’ போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 7 போட்டித்தொடர் நடைபெற்றுள்ளது.

கடைசியாக 2019-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில், பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு போட்டி நடைபெறவில்லை.

களத்தில் 12 அணிகள் :

இந்நிலையில், 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் உள்ள ஷெராட்டன் கிராண்ட் ஒயிட் பீல்டு ஓட்டல் வளாகத்தில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ், ஒரு முறை கோப்பையை வென்ற ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பை, பெங்களூர் புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ் 

மற்றும் தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி, புனேரி பல்தான், தெலுங்கு டைட்டன்ஸ், குஜராத் ஜெய்ன்ட்ஸ், உ.பி.யோதா, அரியானா ஸ்டீலர்ஸ் ஆகிய 12 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 

லீக் முடிவில், முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். இதில், டாப் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறும்.

எஞ்சிய 4 அணிகள் எலிமினேட்டர் (வெளியேற்றுதல்) ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் இரு அணிகள் அரை இறுதி வாய்ப்பை பெறும்.

மூன்று ஆட்டங்கள் :

இன்றைய தொடக்க நாளில் 3 ஆட்டங்கள் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில், பெங்களூர் புல்ஸ்- மும்பை அணிகள் மோதுகின்றன.

எந்த அணி வெற்றியுடன் ஆட்டத்தை தொடங்க போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில், தமிழ் தலைவாஸ்- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. 

சுர்ஜித்சிங் தலைமையிலான தமிழ் தலைவாஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 3 முறை லீக் சுற்றை தாண்டாத தமிழ் தலைவாஸ் அணி, இந்த தடவையாவது எழுச்சி பெறுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இரவு 9.30 மணிக்கு நடைபெறும் 3-வது ஆட்டத்தில், பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா அணிகள் மோதுகின்றன.

கொரோனா பரிசோதனை :

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை (பயோ பபுல்) பின்பற்றி போட்டிகள் நடைபெறுகிறது.

போட்டியில் பங்கேற்கும் 12 அணி வீரர்களும் ஓட்டலில் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஓட்டலை விட்டு வெளியே செல்ல முடியாது. மேலும், தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

புரோ கபடி லீக் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 
*

Share this story