3 பேரில் சிறந்த கிரிக்கெட் வீரர் யார்? : ஐசிசி.யின் மாதத்தேர்வு 

Who is the best cricketer out of 3  ICC Monthly Exam

ஐ.சி.சி. மாதந்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. 

அதன்படி, டிசம்பர் மாதத்தில் யார் சிறந்த வீரர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், மயங்க் அகர்வால் சிறப்பாக செயல்பட்டார். 2 போட்டிகளில் விளையாடி 276 ரன்கள் எடுத்துள்ளார். 

இதில், ஒரு சதமும், 2 அரை சதமும் அடங்கும். இதனால், மயங்க் அகர்வால் பெயரை ஐ.சி.சி. பரிந்துரை செய்துள்ளது.

நியூசிலாந்து பந்துவீச்சாளர் அஜாஸ் படேல், இந்திய அணிக்கெதிராக ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்தி அசத்தியதால், அவரது பெயரையும் பரிந்துரை செய்துள்ளது.
 
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில், சிறப்பாக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பெயரையும் பரிந்துரை செய்துள்ளனர்.

இந்த 3 பேரில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வெல்லப் போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Share this story