இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்? : கோலி சூசக தகவல்

Who is the next captain of Indian team  Goalie Indication Information

டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று, நிறைவடைந்தது. 

சூப்பர் 12 சுற்று முடிவில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

கவலை :
 
டி20 உலக கோப்பையின் அரையிறுதிக்கே தகுதிபெறாமல் இந்திய அணி வெளியேறியதைவிட, விராட் கோலி இத்தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகவுள்ளது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற தகவலை விராட் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சி :

நமீபியா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்ற பிறகு பேசிய விராட் கோலி, 'இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் இது. ரோகித் அதற்காக காத்துக் கொண்டுள்ளார். 

இந்திய அணி சிறந்த நபரிடம் தான் செல்கிறது. அந்த நம்பிக்கை உள்ளது' என தெரிவித்தார்.

எனவே, இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் ரோகித் சர்மா என்பதை விராட் கோலியே உறுதிப்படுத்தி உள்ளதாக, ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.  
*

Share this story