குஜராத் அணி கேப்டன் பதவிக்கு சரியான நபர் யார்?: பயிற்சியாளர் நெஹ்ரா பதில்..

By 
gill5

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கிரிக்கெட் உலகில் தற்போது அதிகம் பேசப்படும் விஷயமாக உள்ளது. 

இந்த விஷயம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா. அதில், "ஹர்திக் பாண்டியா போன்ற ஒரு வீரருக்கு மாற்று வீரர் கொண்டுவருவது என்பது கடினம். ஏனென்றால், அவரின் திறமையும், அனுபவம் கவனத்தில் கொள்ளும்போது அவரை மாற்றுவது மிக கடினமான செயல்.

ஹர்திக்குக்கு மாற்றாக ஷுப்மன் கில்லை கேப்டனாக்கியுள்ளோம். கடந்த சில ஆண்டுகளாக கில் தன்னைத் தானே எப்படி மேம்படுத்தியுள்ளார் என்பதை நாங்கள் பார்த்து வருகிறோம். அவருக்கு 25 வயதுதான். எனினும் அவரிடம் நல்ல தலைமை பண்பு உள்ளது. அவரை நாங்கள் நம்புகிறோம். அதனால் தான் கேப்டன் ஆக்கினோம். 

நான் எப்போதும் ரிசல்ட்களை தேடும் நபர் அல்ல. ரிசல்ட் முக்கியம்தான். ஆனால் கேப்டன் பதவி என்று வரும்போது மற்ற சில விஷயங்களையும் நாம் பார்க்க வேண்டும். அப்படி பார்க்கும்பட்சத்தில் குஜராத் அணியின் கேப்டன் பதவிக்கு கில் சரியான நபர் என்றே எங்களுக்கு தோன்றுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
 

Share this story