ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரின் ராயல் ஃபேமிலி யார் யார் தெரியுமா?

By 
rayals

ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய 7 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 5 வெற்றிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது. இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் 38ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உள்ள வீரர்களில் திருமணம் செய்து கொண்ட வீரர்கள் யார் யார், அவர்களது மனைவிமார்கள், குடும்பம் பற்றி பார்க்கலாம் வாங்க…

சஞ்சு சாம்சன் – சாருலதா ரமேஷ்:

ஆர்ஆர் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் ஐபிஎல் கிரிக்கெட்டில் தனக்கென்று தனி அடையாளத்தை வகுத்துக் கொண்டாலும், இந்திய அணியில் அதற்கான வாய்ப்பு இன்னும் அமையவில்லை. அவரது மனைவி சாருலதா ரமேஷ் ஒரு வளர்ந்து வரும் தொழில்முனைவோராக தனக்கென ஒரு பாதையை செதுக்கிக் கொண்டார். கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி இவர்களது திருமணம் கோவளத்தில் உள்ள ரிசார்ட்டில் நடைபெற்றுள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் – பிரீத்தி நாராயணன்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்தாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக சோபிக்கவில்லை. இதுவரையில் நடந்த 7 போட்டிகளில் 6 இன்னிங்ஸ் விளையாடி 23 ஓவர்கள் வீசி 209 ரன்கள் கொடுத்துள்ளார். அதோடு, ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். தமிழக வீரரான அஸ்வின் கடந்த 2011, நவம்பர் 13 ஆம் தேதி பிரீத்தி நாராயணனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகள் இருக்கிறார்கள்.

யுஸ்வேந்திர சஹால் – தனஸ்ரீ வர்மா:

ஐபிஎல் கிரிக்கெட்டில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி வரும் யுஸ்வேந்திர சஹால் மற்றும் தொழில்முறை நடன இயக்குனரும், யூடியூப் நடன கலைஞருமான தனஸ்ரீ வர்மா இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஜோஸ் பட்லர் – லூயீஸ் பட்லர்:

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி ஜோஸ் பட்லர் மற்றும் லூயிஸ் பட்லர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதில், லூயிஸ் பட்லர், ஃபிட்னெஸ் டிரைனராக இருக்கிறார். இதற்காக ஸ்டூடியோவும் வைத்திருக்கிறார்.

நவ்தீப் சைனி – சுவாதி அஸ்தானா:

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி மற்றும் சுவாதி அஸ்தானா கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சுவாதி அஸ்தானா விமான பணிப்பெண்.

சந்தீப் வாரியர் – தாஷா சாத்விக்:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலியான தாஷா சாத்விக்கை சந்தீப் வாரியர் திருமணம் செய்தி கொண்டார். தாஷா சாத்விக் நகை வடிவமைப்பாளராக, தொழில் முனைவோராக சிறந்து விளங்குகிறார்.

டிரெண்ட் போல்ட் – கெர்ட் ஸ்மித்:

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மற்றும் கெர்ட் ஸ்மித் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

Share this story