ஐசிசி அறிவித்த அணியில், ஒருவர் கூட இந்திய வீரர் இல்லை ஏன்? : வைரல் விவாதம்

Why is not even an Indian player in the squad announced by the ICC  Viral discussion

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நிறைவடைந்தது. இந்த முறை டி20 சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி மகுடம் சூடியது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில், மிகவும் மதிப்புமிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த அணியில், ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே  இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல், மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணியின் வீரர்கள் விவரம் வருமாறு :

1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)
2.ஜோஸ் பட்லர்-விக்கெட்கீப்பர்(இங்கிலாந்து)
3.பாபர் அசாம்-கேப்டன்(பாகிஸ்தான்)
4.சரித் அசலங்கா(இலங்கை)
5.ஏடன் மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா)

6.மொயின் அலி(இங்கிலாந்து)
7.வணின்டு ஹசரங்கா(இலங்கை)
8.ஆடம் ஸாம்பா(ஆஸ்திரேலியா)
9.ஜோஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா)
10.ட்ரெண்ட் பவுல்ட்(நியூசிலாந்து)

11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா)
12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்).
ஆகியோர் ஆகும். 

இந்நிகழ்வு, வலைத்தளங்களில் விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது.
*

Share this story