விக்கெட் 100 : மலிங்கா சாதனையை, ரஷீத்கான் முறியடிப்பு

Wicket 100 Malinga breaks record, Rashid Khan breaks

வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன், நியூசிலாந்தின் டிம் சவுத்தி ஆகியோர் டி20 போட்டியில் 100 விக்கெட்கள் எடுத்துள்ளனர்.
   
டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் விக்கெட்டை ரஷீத் கான் எடுத்தார். இது அவரது 100-வது விக்கெட் ஆகும்.
 
மேலும், 53 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரஷீத் கான் அதிவேகமாக 100 விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

முன்னதாக, இலங்கையின் லசித் மலிங்கா 76 போட்டிகளில் 100 விக்கெட் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
*

Share this story