மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்படுகிறாரா பும்ரா?: ரசிகர்கள் அதிர்ச்சி..

By 
pumrah4

மும்பை அணியில் இருந்து பும்ரா வெளியேற்றப்பட வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி வாங்கியுள்ள நிலையில் பும்ரா வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பும்ரா தனது இன்ஸ்டாகிராமில், ‘சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்த பதில்' என்று தெரிவித்துள்ளார். மேலும் மும்பை இந்தியன்ஸ் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின்தொடர்வதையும் பும்ரா நிறுத்திவிட்டார். இதனால் மும்பை அணி பும்ராவை கைவிட போவதாக கூறப்படுவதால், மும்பை ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் மும்பை அணி பல போட்டிகளில் வெற்றி பெற பும்ரா காரணமாக இருந்த நிலையில், தற்போது அவரை கழட்டி விடுவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இருப்பினும் மும்பை அணியிலிருந்து பும்ரா வெளியேற்றப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை என்பதால் அதுவரை பொறுமை காக்கலாம்.

Share this story