நடாசாவை பிரிந்தால், ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா?

By 
nadasa3

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசாவை பிரிந்தால் ஜீவனாம்சமாக 70 சதவிகித சொத்தை அவருக்கு கொடுக்க வேண்டிய நிலை உண்டாகும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இறுதிப் போட்டியை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருநாளில் சாம்பியன் யார் என்பது குறித்து தெளிவாக தெரிந்துவிடும். இது ஒரு புறம் இருந்தாலும் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று விளையாடிய ஹர்திக் பாண்டியா தனது மனைவி நடாசா ஸ்டான்கோவிச்சை விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாசா ஸ்டான்கோவிச் இருவரும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில் அதே ஆண்டு ஜூலை மாதம் இவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தான். மகன் பிறந்து 7 மாதங்களுக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா லாக்டவுன் என்பதால் மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இருவரும் மீண்டும் திருமணம் செய்தனர். இந்த திருமண நிகழ்ச்சியானது, மெஹந்தி, சங்கீத், ஹல்தி என்று பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களாக நடாசா ஸ்டான்கோவிச் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. அதோடு, நடாசா ஸ்டான்கோவிச் பாண்டியா என்ற தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த பாண்டியா என்ற பெயரை நீக்கியுள்ளார்.

மேலும், பாண்டியா தொடர்பான புகைப்படங்களை நடாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். மகன் அகஸ்தியா உடன் இருக்கும் ஹர்திக் பாண்டியா புகைப்படத்தை மட்டும் விட்டு வைத்திருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்தடுத்த தோல்விக்கு ஹர்திக் பாண்டியாவின் குடும்ப வாழ்க்கை தான் காரணமாக இப்போது தகவல் பரவி வருகிறது.

 

Share this story