இன்று நியூசிலாந்தை வென்று, தொடரை கைப்பற்றுமா இந்தியா? : ரசிகர்கள் எதிர்பார்ப்பு

Will India beat New Zealand today and capture the series  Fans expect

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 2-0 என கைப்பற்றியுள்ளது.

இன்றிரவு :

இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது.

டி20 உலக கோப்பை தொடர் நடந்த சில தினங்களில் நியூசிலாந்து அணி இந்தியாவில் பயணித்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் 164 ரன்களும், இரண்டாவது போட்டியில் 153 ரன்களும் சேர்த்தது. பந்து வீச்சிலும் அந்த அணி வீரர்கள் எந்த நேரத்திலும் சவால் அளிக்கும் வகையில் துல்லியமாக வீசுகின்றனர்.

இன்றைய ஆட்டத்தில் தோற்காமல் ஆறுதல் வெற்றியாவது பெறவேண்டும் என்பதால் நியூசிலாந்து வீரர்கள் போராடுவார்கள். 

எதிர்பார்ப்பு :

இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. பந்துவீச்சில் அஸ்வின், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் உள்ளிட்ட பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் வீசி விக்கெட்களை வீழ்த்தி வருகின்றனர்.

எனவே, இந்த போட்டியில் வென்று டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்ற வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். 
*

Share this story