உலகக்கோப்பையில் கோலி விளையாடுவாரா? ரிஷப் பண்ட், சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அனலாகும் விவாதம்..

By 
wc44

ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் விராட் கோலி இடம் பெற்று விளையாடுவாரா என்ற விவாதம் தற்போது எக்ஸ் பக்கத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் வரும் ஜூன் 1 ஆம் தேதி 9ஆவது டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் தொடங்குகிறது. இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், கனடா, நமீபியா, ஓமன், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், உகாண்டா, இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாள், இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினி என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.

இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களள் வரும் 30 ஆம் தேதி அல்லது மே 1 ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தான் இந்த தொடரில் விராட் கோலி இடம் பெறுவாரா? என்ற விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த ஐபிஎல் தொடர் மூலமாக காயத்திலிருந்து மீண்டு வந்த ரிஷப் பண்ட்டிற்கு அணியில் வாய்ப்பு கிடைக்குமா? சஞ்சு சாம்சன் இடம் பெறுவாரா என்ற விவாதம் நடக்கத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா, டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் டாப் 3 வீரர்கள் யார் யார் என்று குறிப்பிட்டுள்ளார். அதில், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் டி20 போட்டிகளில் இடம் பெறவில்லை. இதில் இருவரும் விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், டி20 போட்டிகளில் ரிங்கு சிங், ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, இஷான் கிஷான், சுப்மன் கில், ஷிவம் துபே என்று இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் தான் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்தது. இருவரும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் விளையாட ஆர்வமாக இருக்கின்றனர்.

இதன் காரணமாகத்தான் அண்மையில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம் பெற்று விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story