'புதிய கோச்சர்' டிராவிட், இந்திய அணியை மேலும் பலப்படுத்துவாரா? : காம்பீர் விளக்கம்

By 
'New coach' Dravid will further strengthen the Indian team, says Gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, ராகுல் டிராவிட் தற்போது செயல்பட்டு வருகிறார். 

அவரது தலைமையின் கீழ், இந்திய அணி நியூசிலாந்துடன் இருபது ஓவர் போட்டியில் விளையாடி வருகிறது. 

முதல் போட்டியில்  5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. முன்னதாக, கவுதம் காம்பீர் கூறியதாவது :

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மிகவும் வெற்றிகரமான பயிற்சியாளராக வருவார். அவர் மிகவும் வெற்றிகரமான வீரராக இருந்தார், பின்னர் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார். 

தற்போது, அவர் ஒரு வெற்றிகரமான பயிற்சியாளராகவும் மாறப் போகிறார் என்று நான் நம்புகிறேன். அவர் கேப்டனாக பணியாற்றிய போட்டிகளிலும் சிறப்பாக பங்களிப்பு செய்துள்ளார். 

டிரெஸ்சிங் அறையில் ராகுல் டிராவிட் உடனிருப்பது வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுக்க கூடியதாக இருக்கும். அவர் இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றுவார்' என்றார்.
*

Share this story