இந்திய பெண்கள் அணி, இன்று ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துமா?

Will the Indian women's team beat the Australian team today

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 

ரத்து :

இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

இந்நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கராரா ஓவல் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடக்கிறது.

சூளுரை :

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடரை என்ன விலை கொடுத்தாவது வெல்வோம் என்று இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சூளுரைத்துள்ளார். 

இதனால், வலுவான அணிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. 

இந்திய நேரப்படி பகல் 1.40 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3,4 ஆகிய சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.

Share this story