மகளிர் கிரிக்கெட் டுடே : டெல்லியை விரட்டி, மும்பை மிரட்டலான வெற்றி; அதிரடி ரன்ஸ் விவரம்..

miw

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். போட்டியை போன்று பெண்களுக்கான பிரிமீயர் லீக் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

முடிவில் டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் வாங் மற்றும் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அமெலி கெர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 

இதனைத்தொடர்ந்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் யாஸ்திகா பாட்டியா மற்றும் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் யாஸ்திகா பாட்டியா 4 ரன்னில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத்தொடர்ந்து ஹெய்லி மேத்யூசும் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக நாட் சிவெர் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடி அணியின் ரன் ரேட்டை உயர்த்தினர். 

இந்நிலையில் இந்த ஜோடியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 37 (39) ரன்களுக்கு ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக நாட் சிவெருடன் அமெலி கெர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் நாட் சிவெர் 52 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இந்த ஜோடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. 

இதன்மூலம் பெண்கள் பிரிமீயர் லீக் இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 

இந்த போட்டியில் கோப்பையை கைப்பற்றிய மும்பை அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெற்ற டெல்லி அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

Share this story