மகளிர் உலகக் கோப்பை ஆட்டம் : இடம் பெற்ற 15 பேர் பட்டியல் வெளியீடு..

Women's World Cup List of 15 winners released

2022 உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணியை பி.சி.சி.ஐ இன்று அறிவித்தது.

மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நியூசிலாந்தில் வரும் மார்ச் 4 முதல் ஏப்ரல் 9 வரை நடைபெற உள்ளது. 

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய மகளிர்அணியை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. அதன்படி, 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு கேப்டனாக மிதாலி ராஜ், துணை கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

மேலும், உலகக்கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்துடன், ஒரு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் இந்திய மகளிர் அணி மோதுகிறது. 

இதிலும், மிதாலி ராஜ் தலைமையிலான அணியே விளையாடும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் மற்றும் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வருமாறு :

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கவுர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சினே ராணா, 

ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங் தாக்கூர் தனியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஸ்வரி கயக்வாட், பூனம் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காத்திருப்பு வீரர்களாக சப்பினேனி மேகனா, ஏக்தா பிஷ்ட், சிம்ரன் தில் பகதூர் ஆகியோர் ஆவர்.
*

Share this story