உலக வில்வித்தை போட்டி : இந்தியர்கள் தங்கம் வென்று சாதனை..

By 
villl

* அயர்லாந்தில் இளையோருக்கான உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில், 21 வயதிற்குட்பட்டோருக்கான காம்பவுண்டு வில்வித்தை போட்டியில், இந்தியாவின் பிரியன்ஷ், சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

இவர் இறுதிச்சுற்றில் ஸ்லோவேனியாவைச் சேர்ந்த அல்ஜாஷ் பிரென்க் என்ற வீரரை 147-141 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார்.

முன்னதாக 18 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் ஸ்வாமி காம்பவுண்டு பிரிவில் அமெரிக்காவின் லீன் டிரேக்கை 142-136 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். இதன்மூலம்  இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. இதில் 5 தங்கம் அடங்கும்.

* கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் சுவரேவ், இத்தாலி வீரர் மேட்டி பெரெட்டினியை எதிர் கொண்டார்.

இதில் பெரெட்டினி 6-3, 7-௬ (7-4), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.

 


 

Share this story