உலக பேட்மிண்டன் போட்டி : ஸ்ரீகாந்த் கலக்கல்; சிந்து கலக்கம்..

World Badminton Tournament Srikanth Mix;

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்பெயினின் வெல்வா நகரில் நடந்து வருகிறது.

இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்துவும், சீன் தைபேயின் தை யு இங்கும் மோதினர்.

அதிர்ச்சித் தோல்வி :

பரபரப்பாக நடைபெற்ற போட்டியில், பி.வி.சிந்து 17-21 என முதல் செட்டையும், 13-21 என இரண்டாவது செட்டையும் இழந்தார். 

இறுதியில், சீன தைபே வீராங்கனை 21-17, 21-13 என்ற கணக்கில் சிந்துவை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி :

ஆண்கள் ஒற்றையர் பிரிவில், முன்னாள் நம்பர் ஒன் வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-8, 21-7 என்ற கணக்கில் நெதர்லாந்து வீரரை வீழ்த்தி, அரை இறுதிக்குள் நுழைந்தார்.

Share this story