உலகக் கோப்பையும், 2 கேப்டன்களும் : ரவி சாஸ்திரி கருத்து
 

By 
World Cup and 2 captains Ravi Shastri Comment

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்திய போட்டிகளில், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 

டி20 உலக கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளிடம் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

அதன்பின், சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் இந்தியா இழந்தது. டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக இருந்தார். 

தோல்வி :

அதன்பின், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். ஒருநாள் தொடரில் கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். ஆனால், 3 போட்டிகளிலும் இந்தியா தோல்வியுற்றது.
 
இதையடுத்து, இந்திய அணி நிர்வாகம் மீதும், இந்திய வீரர்கள் மீதும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய வீரர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாததும், சரியான தலைமை இல்லாததுமே தோல்விக்கு காரணமாக கூறப்படுகிறது.

இருவர் மட்டும் :

இந்நிலையில், இந்திய அணி குறித்து, முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி  கூறியதாவது :

இந்திய அணி நீண்ட காலமாகவே கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியர்களின் முன்னாள் நட்சத்திரமாக சச்சின் டெண்டுல்கர் இருந்தார். 

ஆனால், அவர் 6 உலக கோப்பைகளில் விளையாடி, ஒரே ஒரு உலக கோப்பையை மட்டுமே வென்றுள்ளார். 

சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லஷ்மண் ஆகிய வீரர்கள் உலக கோப்பையை வென்றதில்லை. 

அதற்காக, அவர்கள் மோசமான வீரர்கள் என்று அர்த்தம் இல்லை. நம்மிடம் உலக கோப்பை வென்ற கேப்டன்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். அதற்காக, இந்திய வீரர்கள் யாரும் சிறந்தவர்கள் இல்லை என கூற முடியாது. 

இந்திய அணி மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்' என்றார்.
*

Share this story