உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்; ஆடுகள விவரம்..

8-வது மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்ஸ் 30 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் நிடா டார் 27 ரன், கேப்டன் பிஸ்மா மரூப் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுக்கு 113 ரன்களே எடுத்தது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்தததால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.