'வேர்ல்ட் கப்' ஃபைனல் : ஒரு பேட்ஸ்மேனுக்கு வந்த பேட் டைம்..
 

'World Cup' Final Bad Time for a Batsman ..

அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை, நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார். 

அப்போது, விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார்.

இந்த ஏமாற்றத்தால், அவர் தனது பேட்டில் கையால் ஓங்கி குத்தினார். 

இதில், காயமடைந்த அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
 
இதற்கிடையே, 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், துபாயில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக, நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டேவன் கான்வே இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அத்துடன், இந்திய தொடரில் இருந்தும் அவர் ஒதுங்கியுள்ளார். கான்வேயின் விலகல் நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
*

Share this story