உலகக்கோப்பை தொடர் : தங்கம் வென்றது இந்தியா; எந்த விளையாட்டு; ஜெயிச்சது யார் தெரியுமா?

rudran

* எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்றுவரும் துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில், இந்தியாவிற்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. 

10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில், இந்திய வீரர் ருத்ரங்ஸ் பாட்டில், ஜெர்மனி வீரர் மேக்ஸி மிலியனை 16க்கு 8 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது.

* டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் பட்டியலில் ஆஸ்திரேலிய அணியின் பேட் கம்மின்ஸை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசியதால் அவர் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அவர் முன்னேறியுள்ளார். 

மேலும் பேட் கம்மின்ஸ் 3-வது இடத்தில உள்ளார். இந்திய வீரர் ஜடேஜா 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர் பட்டியலில் இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா முதலிடம், 2 வது இடத்தில் அஸ்வின் உள்ளனர். அக்சர் படேல் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

Share this story