உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு; இதில், பி.வி.சிந்து..

By 
pvs42

உலக அளவில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைகளின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில், ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற, இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி. சிந்துவுக்கு இந்த பட்டியலில் 12-வது இடம் கிடைத்து உள்ளது.

இந்த பட்டியலில், ஜப்பான் நாட்டு டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா முதல் இடம் பிடித்து உள்ளார். அவரது மொத்த வருவாய் ரூ.420 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.

2-வது இடத்தில், அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உள்ளார். அவரது வருவாய் ரூ.339 கோடியாக உள்ளது. இந்த பட்டியலில், பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஒன்றான பிரீஸ்டைல் ஸ்கையர் பிரிவில் விளையாடி வரும் அமெரிக்கா நாட்டில் பிறந்தவரான எய்லீன் கூ என்ற வீராங்கனை 3-வது இடம் பிடித்து உள்ளார்.

இந்நிலையில், 12வது இடம் பிடித்துள்ள பி.வி.சிந்து கடந்த 2022-ம் ஆண்டில் அவருடைய மொத்த வருவாய் ரூ.58 கோடியாக இருந்து உள்ளது. அவற்றில், களத்தில் விளையாடி கிடைத்த தொகை ரூ.82 லட்சம் என்றும் மற்றும் களத்தில் அல்லாமல் வெளியில் இருந்து கிடைத்த தொகையானது ரூ.57.5 கோடி என்றும் கூறப்படுகிறது.

Share this story