விராட்கோலிக்கு பிறகு 2ஆவது வீரராக சாதனை படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால்..

By 
jaish2

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. ஜோ ரூட்டின் சிறப்பான பேட்டிங்கால் இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 117 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட 73 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த நிலையில் தான் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலிக்கு பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ஆவது இடம் பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முறையே 80, 15, 209, 17, 10 மற்றும் 214 என்று மொத்தமாக 545 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது நடந்து வரும் 4ஆவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் எடுத்திருந்த போது இந்த டெஸ்ட் தொடரில் 600 ரன்கள் கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்களில் 600 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். அவர் 3 முறை 600 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். விராட் கோலியைத் தொடர்ந்து 600 ரன்களுக்கு மேல் எடுத்தவர்களின் பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2ஆவது வீரராக இடம் பெற்றுள்ளார். தற்போது வரை யஷஸ்வி ஜெய்ஸ்வால் 618 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், ஒரே அணிக்கு எதிராக ஒரே சீரிஸில் 2 முறை இரட்டை சதம் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story