தமிழகத்தில் மிக உயரமான ஆஞ்சநேயர் சிலை, ஸ்ரீரங்கத்தில் பிரதிஷ்டை
Updated: Oct 26, 2021, 08:37 IST
By

திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள மேலூர் கிராமத்தில், 37 அடி உயரத்தில் பிரமாண்டமான சஞ்ஜீவன ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதற்கு முன்பு ஆஞ்சநேயருக்கு சென்னை நங்கநல்லூரில் 33 அடி உயரத்திலும், நாமக்கல்லில் 18 அடி உயரத்திலும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது, அதைவிட தமிழகத்திலேயே உயரமாக மேலூரில் 37 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த பிரமாண்ட சிலை ராட்சத கிரேன் உதவியுடன் பீடத்தில் நிலை நிறுத்தும் பணி நடைபெற்றது.
அப்போது, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத, மங்கள இசை முழங்கியது.
இந்த கோவிலின் கும்பாபிஷேகம் வருகிற தை மாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.