'100 சதவீதம் வரிச்சலுகை' தமிழக அரசு அறிவிப்பு : எதற்கு தெரியுமா?

tngovt2

* தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை 2019க்கு இணங்க பேட்டரி வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்க தமிழ்நாடு போக்குவரத்து ஆணையரகம் கேட்டு கொண்டது.

01.01.2023 முதல் 31.12.2025ம் ஆண்டு வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீதம் வரி விலக்கு அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் பேட்டரி மூலம் இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கு 50 சதவீத வரி சலுகை வழங்க அரசாணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது.

* 'நாங்கள் மதவாதத்துக்கு தான் எதிரானவர்களே தவிர மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல. அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.3,657 கோடியே 48 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ்கிறது.

அதனால் தான் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தொழில் தொடங்க வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்று அவதூறு கூறுகிறார்கள். எதையும் ஆதாரத்தோடு கூற வேண்டும்.

இந்த ஆட்சியில் எங்காவது துப்பாக்கி சூடு நடந்ததா? பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் ஏதாவது நடந்ததா? கொடநாடு, கொலை, கொள்ளை யாரது ஆட்சியில் நடந்தது? நாங்கள் எங்கு தவறு நடந்தாலும் நடவடிக்கை எடுக்கிறோம். மதவாத, தீவிரவாத சக்திகளை வளர விடமாட்டோம்' என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

 

Share this story