வெள்ளத்தில் மிதக்கும் 1,043 கிராமங்கள் : பலி எண்ணிக்கை 251 ஆக உயர்வு..பரிதவிப்பு..

By 
1,043 flood-hit villages Death toll rises to 251

மராட்டியத்தில் கனமழை தொடர்பான சம்பங்களில் சிக்கி, 251- பேர் உயிரிழந்தனர்.

மராட்டியத்தில் கடந்த வாரம் 2 நாட்கள் தொடர்ந்து பெய்த கனமழையால் கொங்கன் மற்றும் மேற்கு மராட்டிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. 

வெள்ளத்தில் மிதக்கும் கிராமங்கள் :

குறிப்பாக ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க், கோலாப்பூர், சாங்கிலி, சத்தாரா, தானே, பால்கர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. பல நகர்ப்புறங்களும், கிராமங்களும் வெள்ளத்தில் மிதந்தன. 

மேலும், பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், ஆங்காங்கே நடந்த நிலச்சரிவில் புதைந்தும் உயிரிழந்தனர்.

25,581 விலங்குகள் பலி :

தொடா்மழையால் அங்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 251 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 100 பேரைக் காணவில்லை. மொத்தமாக 13 மாவட்டங்களில் 1,043 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

259 சிறப்பு முகாம்கள் திறக்கப்பட்டு 2,30,000 பேர் முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், 25,581 விலங்குகளும் உயிரிழந்துள்ளன.
*

Share this story