கனமழை வெள்ளத்தில் சிக்கித்தவித்த 105 பயணிகள் மீட்பு..
 

hima

இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால், லாஹவுல்- ஸ்பிடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு நடத்திய மீட்பு நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 105 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

கடந்த வாரம், லாஹவுல் துணை மண்டலத்தில் உள்ள தண்டி- உதைபூர் வழித்தடத்தில் டோசிங் நுல்லா பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில், மீட்கப்பட்டவர்களில் 80 பேர் மணாலிக்கு புறப்பட்டுச் சென்றனர். 

மற்றவர்கள் கோக்சர் மற்றும் சிசுவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

மேலும் 30 நபர்கள் (பெரும்பாலும் ஓட்டுநர்கள்) தங்கள் வாகனங்களுடன் சத்ருவில் தங்கியுள்ளனர். 

இதற்கிடையில், தேசிய நெடுஞ்சாலை 505 தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதேபோல், தமிழ்நாடு, டெல்லி, உத்தரபிரதேசம், இமாச்சல பிரதேசம், கேரளா, ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குலு, ஷிமா, சோலன், பிலாஸ்பூர், காங்க்ரா, சம்பா மற்றும் மண்டி ஆகிய இடங்களிலும் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
*

Share this story