பெண்களை கர்ப்பமாக்க 13 லட்சம்; சுற்றித்திரிந்த பலே கும்பல் - சிக்கியது எப்படி?

By 
safe4

"Pregnant Job Service" என்ற பெயரில் அவர்கள் இந்த மோசடியை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பீகார் மாநிலம் நவாடாவில் தான் அந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் ஆண்களை தொடர்பு கொண்டு, அவர்களின் "சேவைக்கு (பெண்களை கருவுற வைத்தால்)" கைமாறாக, சில பல லட்சங்களை தருகின்றோம் என்று அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வேலைக்கு ஆர்வமுள்ள ஆண்கள் சுமார் 799 பதிவுக் கட்டணமாகச் செலுத்துமாறு அந்த மோசடி கும்பல் கேட்டுள்ளது. அப்படி பணம் கட்டி ஆண்கள் இதில் பதிவு செய்தவுடன், அந்த மோசடி கும்பல் அவர்களிடம், சில பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்தது, அந்த ஆண்கள் கருவூட்ட விரும்பும் பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்படி அவர்கள் கேட்டுள்ளார்கள்.

மேலும் அந்த பெண்களின் கவர்ச்சியை பொறுத்து ரூபாய் 5 முதல் 20,000 வரையிலான பாதுகாப்புத் தொகையை டெபாசிட் செய்யும்படியும் அந்த ஆண்களிடம் அந்த கும்பல் அறிவுறுத்தியுள்ளது. "அந்த பெண்கள் கருவுற்றால் அவர்களுக்கு 13 லட்சம் வழங்கப்படும் என்றும், மேலும் அந்த பெண் கருத்தரிக்கத் தவறினாலும் அவர்களுக்கு ஆறுதல் தொகையாக 5 லட்சம் வழங்கப்படும்" என்று மோசடி கும்பல் கூறியதாக நவாடா காவல் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் கூறினார்.

பீகார் காவல்துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) நவாடாவில் சோதனை நடத்திய பின்னர் தான் இந்த மோசடி கும்பல் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்ட வளாகத்தில் இருந்து மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை போலீசார் பறிமுதல் செய்துள்ளார். மேலும் இந்த கும்பலில் உள்ள அனைவரையும் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Share this story