தமிழகத்தை சேர்ந்த 13 பேர் கைது : ஆந்திர போலீஸ் விசாரணை.

By 
arrest67

ஆந்திராவின் திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்துவதாக சித்தூர் மாவட்ட எஸ்.பி.க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டது.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தூர்-பெங்களூரு நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையின்போது 2 கார்களை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அதில் செம்மரக்கட்டைகள் கடத்தி வந்தது தெரியவந்தது.

கடத்தப்பட்ட 8 செம்மர கட்டைகள் மற்றும் கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டின் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் சித்தூர்- கடப்பா நெடுஞ்சாலையில் நடந்த வாகன சோதனையின்போது, 2 கார்களில் இருந்த 4 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

செம்மரக் கட்டைகள் கடத்தி வந்ததாக, வேலூர் மாவ்டடத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு செம்மரக்கட்டைகள கடத்தியது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.

 

Share this story