2 டோஸ் தடுப்பூசி போட்டும், கங்குலிக்கு கொரோனா : ஆஸ்பத்திரியில் அனுமதி

2 dose vaccination, corona to gangrene hospital admission

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் சவுரவ் கங்குலி. இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கங்குலிக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 

சிகிச்சை :

இதையடுத்து, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருந்துகள் கொடுக்கப்பட்டுள்ளது. 

அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

சவுரவ் கங்குலிக்கு, கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தியுள்ளார்.

நெஞ்சு வலி :

சில நாட்களுக்கு முன்பு, நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு, கங்குலி குடும்பத்தினர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
*

Share this story