போலீசார் 2 பேர் இடமாற்றம்; 6 பேர் சஸ்பெண்ட்

suspended

குஜராத் மாநிலத்தில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் 40 ஆக அதிகரித்துள்ளது.

ஜெயேஷ் என்ற ராஜூ என்பவர் தான் மேலாளராக பணிபுரிந்த அகமதாபாத்தில் உள்ள ஒரு குடோனில் இருந்து 600 லிட்டர் மித்தல் ஆல்கஹாலை திருடி, அதை தனது பொடாட்டை சேர்ந்த உறவினர் சஞ்சய் என்பவருக்கு ஜூலை 25-ம் தேதி ₹40,000க்கு விற்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இது ஒரு தொழில்துறை கரைப்பான் என்பதை அறிந்திருந்தும், சஞ்சய் இந்த ரசாயனத்தை போடாட்டின் பல்வேறு கிராமங்களில் உள்ள கொள்ளையர்களுக்கு விற்றுள்ளது தெரியவந்துள்ளது. 

இந்த கொள்ளையர்கள் ரசாயனத்தில் தண்ணீரை கலந்து நாட்டு மதுபானமாக மக்களுக்கு விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பொடாட் மற்றும் அகமதாபாத் காவல்துறை கண்காணிப்பாளர்கள் இடமாற்றம் மற்றும் காவலர்களை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். 

இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜ்குமார் கூறியதாவது:- போடாட் எஸ்பி கரன்ராஜ் வகேலா மற்றும் அகமதாபாத் ஸ்பி வீரேந்திரசிங் யாதவ் ஆகியோரை இடமாற்றம் செய்துள்ளோம். 

இரண்டு துணை எஸ்பிகள் உள்பட ஆறு போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
*

Share this story