இந்தியாவில் 21 போலி பல்கலைக்கழகங்கள்; இவை வழங்கும் பட்டங்கள் செல்லாது : யுஜிசி எச்சரிக்கை

ugc

மத்திய பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவிடம் அங்கீகாரம் பெறாமல் நடத்தப்படும் 21 போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதில், தலைநகர் டெல்லியில் சுமார் 8 போலி பல்கலைக்கழகங்களும், உத்தர பிரதேசத்தில் 7, ஒடிசா, மேற்குவங்காளம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா, புதுச்சேரியில் தலா ஒரு போலி பல்கலைக்கழங்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் போலி பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என யுஜிசி எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story