25 கிலோ தங்க நகைகள் கொள்ளை: மர்ம நபர்கள் துணிகரம்..

By 
jos5

கோவையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 25 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை  காந்திபுரம் 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு ஊழியர்கள் பணி முடித்து, வழக்கம் போல கடையை மூடி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில், வழக்கம் போல கடை ஊழியர்கள் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்து கலைந்து கிடந்தன. 

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது கடையின் பின்பக்க சுவரை துளையிட்டு உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் லாக்கரில் இருந்த தங்க நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து உடனே கடையின் உரிமையாளருக்கும், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் நகைக்கடையில் இருந்து சுமார் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடை ஊழியர்கள் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். கோவை நகரின் முக்கிய பகுதியில் கொள்யைடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story