ரூ.27 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல் : 3 பேர் கைது

fack

உத்தரபிரதேச மாநிலம் போஜிபுரா பகுதியில் ஒரு கும்பல் ரூபாய் நோட்டுகளுக்கு 3 மடங்கு கள்ள நோட்டுகளை கொடுத்து பரிமாற்றம் செய்வதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் கள்ளநோட்டுகளுடன் அங்கு நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.27 லட்சம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் ஹர்வன்சிங் என்கிற சோனு, குர்னாம், சதாம் உசேன் என்று தெரிய வந்தது. அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது ரூ.1 லட்சம் கொடுத்தால் பதிலுக்கு ரூ.3 லட்சம் கள்ள நோட்டுகளை கொடுத்தது தெரிய வந்தது.

மேலும் இவர்களுக்கு நேபாளம், டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Share this story