ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுமிகள் குளத்தில் மூழ்கி பரிதாப பலி..

dead3

ஆந்திர மாநிலம், வனபர்த்தி மாவட்டம் தடிபாமுலாவை சேர்ந்தவர் கந்தம் குருமன்னா. இவருடைய மகள்கள் திருப்பத்தம்மா (வயது 12), சந்தியா (9), தீபிகா (7) ஆகியோர் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். 

இந்நிலையில், காலையில்  சிறுமிகள் 3 பேரும் வீரா சமுத்திரம் பகுதியில் உள்ள குளத்தில் துணி துவைக்க சென்றனர். அப்போது திருப்பத்தமா திடீரென எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்து தத்தளித்தார். 

இதனைக் கண்ட அவரது சகோதரிகள் சந்தியா, தீபிகா இருவரும் அக்காவை காப்பாற்ற முயற்சி செய்தனர். அப்போது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சிறுமிகள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்தனர். 

அப்பகுதி வாலிபர்கள் குளத்தில் இறங்கி நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு 3 சிறுமிகளின் பிணங்களை மீட்டனர். சிறுமிகளின் பிணத்தைப் பார்த்து அவரது பெற்றோர்கள், உறவினர்கள் கதறி அழுதது கல் நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமிகள் பிணத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Share this story