50 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ போதைப்பொருள்.. வசமாக சிக்கிய வாலிபர்!

By 
nett

சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை  எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 கிலோ மெத்த பெட்டமைன் என்னும் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு 50 கோடி என கூறப்படுகிறது. 

சென்னையை சேர்ந்த பிரகாஷ் (42) என்பவர் மெத்த பெட்டமைன் போதைப்பொருள் கடத்தி செல்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய அரசின் சுங்க அமைப்பின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு கிடைத்த இந்த தகவலின் அடிப்படையில் அவரை பின்தொடர்ந்து சென்றனர். 

பின்னர் சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு செல்லும் பொதிகை விரைவு ரயிலில் பயணித்த பிரகாஷ் ஏறினார். அதிகாரிகளும் ரயிலில் அவரை கண்காணித்தபடியே வந்தனர். மதுரை ரயில் நிலையத்தில் பிரகாஷ் இறங்கியபோது, அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். இரண்டு பைகளில் சோதனை செய்ததில் 10 பொட்டலங்களில் 15 கிலோ பவுடர் மற்றும் 15 கிலோ திரவ வடிவிலான 30 கிலோ மதிப்பிலான போதைப்பொருள் இருந்தது.

உடனே அதிகாரிகள் பிரகாஷை மதுரை ரயில் நிலையக் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் கஞ்சா, குட்கா, பான் மசாலா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு இடையே அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Share this story