30 குண்டுகள் முழங்க, வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை..
 

vani2

தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78), நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

இதனை போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து உள்ளனர். வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  

அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது. தற்போது அவரின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் 30 குண்டுகள் முழங்க வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

10 காவலர்கள் 3 சுற்றுகளாக 30 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். வாணி ஜெயராமின் உடல் தகனம் செய்யப்பட்டது.

Share this story