இலங்கை தமிழர்களுக்காக 321 குடியிருப்புகள் : முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

mkss2

* திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து வசதிகளுடன் மறுவாழ்வு முகாம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி மூலம் புதிய குடியிருப்புகளை தொடங்கி வைத்தார். இந்த வீடுகள் தோட்டனூத்து, அடியனூத்து, கோபால்பட்டியில் உள்ள முகாம்களை ஒருங்கிணைத்து கட்டப்பட்டுள்ளன.

மேலும், உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ரூ.17.84 கோடி செலவில் தலா 300 சதுர அடியில் 321 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள.

* மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வியாழக்கிழமை) தங்குகிறார். காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு அவர் மாலை அணிவிக்கிறார். காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார்.

அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

Share this story