3-வது தவணை தடுப்பூசி : இணையதளத்தில் இன்றுமுதல் புதிய வசதி

By 
3rd installment of the vaccine a new feature on the Internet today

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்காக, நேரத்தையும் இடத்தையும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம் என்று மத்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. 

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

3-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. 

குறிப்புகள் :

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு, எந்த நேரம் உகந்ததாக இருக்குமோ அதை 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

இதற்காக, இணையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை மாலை முதல், நேரத்தையும் இடத்தையும் ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி, விவரங்களை அதில் பெறலாம். அதிலேயே குறிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

வருகிற 10-ந்தேதி தடுப்பூசி முகாம்கள் எங்கெங்கு செயல்படுகிறதோ, அவற்றில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களுக்கு வசதியான முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் :

நாடு முழுவதும் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தும் பட்டியலில், சுமார் 6 கோடி பேர் உள்ளனர். 

இந்த 6 கோடி பேருக்கும் வருகிற மார்ச் மாதத்துக்குள் 3-வது தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
*

Share this story