தாடியை ஷேவ் செய்ததாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட்..
Tue, 21 Feb 2023

உத்தரபிரதேச மாநிலம் ஷஹரன்பூரில் இஸ்லாமிய மத கல்வி நிறுவனம் உள்ளது. தலோல் உலோம் டியொபெண்ட் என்ற இஸ்லாமிய மத கல்வி நிறுவனத்தில் பல்வேறு மாணவர்கள் இஸ்லாமிய மத கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மத கல்லூரியில் தாடியை ஷேவ் செய்ததாக 4 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மாணவர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தாடியை வெட்டுவது இஸ்லாமிய மதத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.