ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது குழந்தை : மீட்புப் பணி தீவிரம்..

4-year-old child who fell into a deep well Rescue work intensified ..

ஆழ்குழாய் கிணறுகள் தொடர்பாக, அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியபோதும், பலர் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.

பறிபோகும் உயிர்கள் :

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை சரியான முறையில் மூடப்படாததால், பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன. இது தொடர்பாக, அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். 

தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும், பலர் ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். 

பெற்றோர் சோகம் :

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. 

இன்று, அந்த நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது குழந்தை, ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது.  

இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Share this story