போதையில் கார் ஓட்டி வந்த 5 மாணவர்களால், கொடூர விபத்து..

drink

டெல்லி கேசவ்புரத்தில் அதிகாலையில் நடந்த விபத்தில் ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்தவரும், பின்னால் இருப்பவரும் வாகனத்தின் பானட்டில் சுமார் 350 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இல்லாமல் இறந்தனர். 19 மற்றும் 21 வயது உடைய 5 மாணவர்கள் குடிபோதையில் கார் ஓட்டி வந்த போது இந்த விபத்து நடந்தது.

இது தொடர்பாக 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைலாஷ் பட்நாகர் ஸ்கூட்டரை ஓட்டி வந்தவர் என்று தெரியவந்தது. பின்னால் இருந்தவர் சுமித் காரி என்று அடையாளம் தெரிந்தது.
 

Share this story