சிறப்பு பேருந்துக்காக சென்னையில் 6 பேருந்து நிலையம்; எங்கிருந்து எந்த ஊருக்கு பஸ் புறப்படுகிறது? முழு விவரம்..

By 
sbus1

பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் உறவினர்களோடு கொண்டாட சென்னையில் பணி நிமித்தமாக தங்கியிருப்பவர்கள் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து பொதுமக்களின் வசதிக்கா 16ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இருந்து வெளியூருக்கு பொதுமக்கள் செல்ல வசதியாக 6 தற்காலிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 

பொங்கல் திருநாளை ஒட்டி பொதுமக்கள் தங்கள் ஊர்களுக்கு பயணம் செய்ய ஏதுவாக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலம் இன்று (12.01.2024) முதல் 14.01.2024 ஞாயிறு வரை சிறப்பு பேருந்துகள் இயக்கிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையின் 6 பேருந்து நிலையங்களிலிருந்து 12.01.2024 முதல் 14.01.2024 வரை பேருந்துகள் இயக்கப்படுகிறது. 

1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள்

2. கலைஞர் கருணாநிதி நகர் மா.போ.கழக பேருந்து நிலையம்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி. கடலூர் மற்றும் சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள். 

3. தாம்பரம் சானிடோரியம்  அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் (MEPZ)

திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து TNSTC வழித்தட பேருந்துகள் (அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் நீங்கலாக).

ஆ) வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தம்

தாம்பரத்திலிருந்து ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகள்.

Special buses for Pongal leave from which place to which town KAK


4. பூவிருந்தவல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம் (பூவிருந்தவல்லி மாநகர பணிமனை அருகில்)

பூவிருந்தவல்லி வழியாக ஆற்காடு, ஆரணி, வேலூர்.  தர்மபுரி, கிருஷ்ணகிரி. திருப்பத்தூர், காஞ்சிபுரம்.செய்யாறு. ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி மாநகர போக்குவரத்துக் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள்.

5. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு

போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த விழுப்புரம், மதுரை கும்பகோணம், சேலம். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி கோட்டத்தை சார்ந்த பேருந்துகள் கீழ்கண்ட தட பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம். வேளாங்கண்ணி. திருச்சி கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், திண்டிவனம்| மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள். போரூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள். திண்டிவனம் வழியாக..

பண்ருட்டி நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், அரியலூர், திட்டக்குடி. செந்துறை. செயங்கொண்டம். காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி இராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துத் கழகத்தை சார்ந்த பேருந்துகள் பெங்களுர் மற்றும் ECR மார்க்கமாக இயக்கப்படும் மயிலாடுதுறை, நாகப்பட்டினம். திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி.

6. கலைஞர் பேருந்து நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம்

தேசிய நெடுஞ்சாலை NH-45 வழியாக செல்லும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த கீழ்கண்ட தடங்கள்:

திருச்சி. தஞ்சாவூர். கும்பகோணம், கரூர் , மதுரை, திருநெல்வேலி. செங்கோட்டை, தூத்துக்குடி, மார்த்தாண்டம், திருச்செந்தூர். நாகர்கோவில். திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல். திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம். சேலம். கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளம். 

முன்பதிவு செய்த பயணிகள்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே கிளாம்பாக்கம், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். மற்ற போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்த / முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட 5 பேருந்து நிலையங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, 12.01.2024 தேதி வரை 1,24,983 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story