60 இந்துக்கள் கட்டாய மதமாற்றம்
 

60 Forced conversion of Hindus

பாகிஸ்தான், சிந்து மாநிலத்தில் வசிக்கும் நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமி இந்த கட்டாய மத மாற்றத்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.

பாகிஸ்தானில் இந்துக்கள் 45 லட்சம் பேர் உள்ளனர். பாகிஸ்தான் மக்கள் தொகையில், 2 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் இந்துக்கள் ஆவர். அவர்களில் பெரும்பாலானோர் சிந்து மாநிலத்தில் வசிக்கிறார்கள்.

இந்நிலையில், சிந்து மாநிலத்தில் வசிக்கும் இந்துக்கள் 60 பேர் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்குள்ள நகராட்சித் தலைவர் அப்துல் ரவூப் நிஜாமி இந்த கட்டாய மத மாற்றத்துக்கு ஏற்பாடு செய்ததாக தெரிகிறது. 

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள ஒரு பேஸ்புக் பதிவில், இதை அவர் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது. 

Share this story