லிப்ட் அறுந்து விழுந்து 8 பேர் பரிதாப பலி..

acci3

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள குஜராத் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தின் லிப்ட் அறுந்து விபத்துக்குள்ளானது.

இதில் லிப்டுக்குள் இருந்த 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் திடீரென ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மண்டலம் 1-ன் காவல்துறை துணை ஆணையர் லவினா சின்ஹா கூறுகையில் "தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லிப்ட் ஏழாவது மாடியில் இருந்து தரையில் விழுந்ததில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது" என்று ​​தெரிவித்தார்.

Share this story