ரயில் விபத்தில் 9 பேர் பலி : பிரதமர் மோடி இரங்கல்
 

By 
9 killed in train accident PM Modi mourns

மேற்கு வங்காள மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் பிகானர்-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. 

மொத்தம் 12 பெட்டிகள் தடம் பரண்டன. தோகோமணி அருகே நிகழ்ந்த இந்த விபத்தில், 3 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

45 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தலா ரூ. 5 லட்சம் :

இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. 

படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

பிரதமர் இரங்கல் :
 
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்த அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்வதாக தெரிவித்தார்.
 
இந்நிலையில், ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது என வடகிழக்கு ரயில்வே, தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
*

Share this story