ஏடிஎம் எந்திரத்தை உடைத்து, ரூ.17 லட்சம் கொள்ளை..

atm

பஞ்சாப் மாநிலம்,ஹேசியாபூர் மாவட்டம், பிஹம் கிராமத்தில் இருந்த பஞ்சாப் நேசனல் வங்கியின் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளையர்கள் ரூபாய் 17 லட்சம் பணத்தை திருடி இருக்கிறார்கள்.

இச்சம்பவம்  அதிகாலை 2.40 மணியளவில் நடந்துள்ளது. இது தொடர்பாக சப்பேவால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதற்கு கேஸ் கட்டரை பயன்படுத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து வங்கியின் துணை மேலாளரான ஜஸ்வீர் சிங் கூறுகையில், சிசிடிவி காட்சியின்படி திருடர்கள் அதிகாலை 2.40 மணியளவில் காரில் வந்து எடிஎம்-ஐ உடைத்து ரூ.17 லட்சத்தை திருடி இருக்கிறார்கள், என்றார்.

ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும், அதனை சுற்றி உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வருவதாக டிஎஸ்பி தெரிவித்துள்ளார

Share this story