நடிகர் விஜய்க்கு போலீசார் அபராதம் விதிப்பு..
 

vijay3

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் 2023-ஆம் ஆண்டு சங்கராந்திக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இதைத்தொடர்ந்து நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க சென்ற போது அவரது காரை ரசிகர்கள் பலரும் பின் தொடர்ந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அதுமட்டுமல்லாமல் விஜய் காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஓட்டியிருப்பது குறித்து நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், மோட்டார் வாகன திருத்த சட்டத்தின் அடிப்படையில் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடிகர் விஜய்க்கு ரூ.500 அபராதம் விதித்துள்ளனர்.

Share this story